அண்மைய செய்திகள்

recent
-

புதிய பாப்பரசராக பதவியேற்றார் 14ஆம் லியோ

 உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த புனித பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான கர்த்தினால் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது. 


இதில், வட அமெரிக்காவை சேர்ந்த கர்த்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் கத்தோலிக்கர்களின் 267ஆவது பாப்பரசராக தேர்வு செய்யப்பட்டார். அவர் போப் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார் என்று கர்த்தினால்கள் அறிவித்தனர். 


பின்னர் புதிய பாப்பரசர் 14ஆம் லியோ மேல் தளத்திற்கு வந்து அங்கே கூடியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கி பேசினார். அப்போது இத்தாலிய மொழி மற்றும் ஸ்பானிஷ் மொழி ஆகியவற்றில் பாப்பரசர் லியோ பேசினார். இதைத் தொடர்ந்து, பாப்பரசர் லியோ தனது முதல் திருப்பலியின் தொடக்கத்தில் கர்த்தினால்கள் முன்னிலையில் முதல் முறையாக ஆங்கிலத்தில்

 உரையாற்றினார். 


இந்நிலையில் வத்திக்கானில் இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய பாப்பரசராக 14ஆம் லியோ இன்று பதவியேற்றுள்ளார். பாப்பரசர் 14ஆம் லியோவுக்கு, பாப்பரசரின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது. பதவியேற்பின் போது போரால் பாதிக்கப்பட்ட காசா, உக்ரைன் மக்களுக்காக பாப்பரசர் 14ஆம் லியோ சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். 


புதிய பாப்பரசர் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.





புதிய பாப்பரசராக பதவியேற்றார் 14ஆம் லியோ Reviewed by Vijithan on May 19, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.