பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான டாப் 10 நாடுகள்..பிரித்தானியாவிற்கு....
ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக தலைவர்கள் பலரும் மகளின் தின வாழ்த்துக்களையும், பெண்களின் முக்கியதுவத்தையும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மகளிர் தினமான இன்று உலகில் பெண்கள் நிம்மதியாகவும், தாங்கள் வாழ்வதற்கு சந்தோஷமாக இருக்கும் நாடுகள் எது என்பது பற்றி கூறியுள்ளனர்.
அதில் அவர்கள் தங்களுக்கு இங்கு தங்களுக்கு சமமான உரிமை கொடுக்கப்படுவதாகவும், எங்களுக்கென்று பாதுகாப்பை உணர்வதாகவும், வாழ்வதற்கு சிறந்த நாடு என்று கூறியுள்ளனர்.
அதில் கொடுக்கப்பட்ட 10 புள்ளிகளில் நார்வே 8.7 புள்ளிகளில் முதல் இடத்திலும், ஸ்வீடன் 8.4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன. மேலும் முதல் மூன்று இடங்களில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் இடம் பிடிக்கவில்லை, ஆனால் அதே சமயம் பெண் வேலை பார்க்கும் இடங்களில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்ற வரிசையில் ஐஸ்லாந்து முதல் இடத்திலும், ஸ்வீடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதில் கனடா 11-வது இடத்தையும், பிரித்தானியா 13-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான டாப் 10 நாடுகள்..பிரித்தானியாவிற்கு....
Reviewed by Author
on
March 09, 2019
Rating:

No comments:
Post a Comment