திருகோணமலையில் 360 மில்லியன் ரூபாவில் பல அபிவிருத்தித் திட்டங்கள் -
நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன் மற்றும் க. துரைரெட்னசிங்கம் ஆகியோரின் ஊடாக புரட்சி திட்ட ( கம்பெரலிய ) நிதி ஒதுக்கீட்டில் கிடைத்த பணத்தினை கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பெரியகுளம் கிராம சேவையாளர் பிரிவில் அரச முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இத் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் 22 குளத் திருத்தங்கள், 133 வீதிகள் அமைப்புகள், 62 பாடசாலை விளையாட்டு அரங்கு சீரமைப்புகள், 9 நீர் வழங்கல் திட்டங்கள்,69 கோவில் மறுசீரமைப்புப் பணிகள், 8 சூரிய மின்வலுத் திட்டங்கள், 63 வீட்டுத் திருத்தங்கள் உள்ளிட்ட சுமார் 360 மில்லியன் ரூபாவுக்கான பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளர் ச.குகதாசன், குச்சவெளி பிரதேச செயலாளர் பொ. தனேஸ்வரன், குச்சவெளி கல்விக் கோட்ட அலுவலர் சீ. தியழகன், பெரியகுளம் தமிழரசுக் கட்சி வட்டாரத் தலைவர் பா. சந்திரமோகன் ஆகியோர் இப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
திருகோணமலையில் 360 மில்லியன் ரூபாவில் பல அபிவிருத்தித் திட்டங்கள் -
Reviewed by Author
on
March 07, 2019
Rating:

No comments:
Post a Comment