இந்தோனேஷியாவில் அடித்து துவைத்த கனமழை! 42 பேர் பலியான பரிதாபம் -
கிழக்கு மாகாணமான பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானி பகுதியில் நேற்று பேய்மழை பெய்தது. இதில் பல வீடுகள் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கனமழையால் 42 பேர் பரிதாபமாக பலியானதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மீட்புப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ள மீட்புப்படை அதிகாரிகள், இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலம் ஆகும். கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவில் 70 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தோனேஷியாவில் அடித்து துவைத்த கனமழை! 42 பேர் பலியான பரிதாபம் -
Reviewed by Author
on
March 18, 2019
Rating:
No comments:
Post a Comment