வெலிகம சர்வ மத குழுவினர் மன்னார் விஜயம்-படங்கள்
சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள மத சார்ந்து செயற்படும் குழுக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள வெலிகம பிரதேசத்தை சேர்ந்த சர்வமத குழுவினர் மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்
மன்னார் மாவட்டதில் அண்மைகாலமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் மத ரீதியான நல்லெண்னத்தை வளர்துக்கொள்ளும் முகமாகவும் நேரடியாக திறந்த மத கலந்துறையாடல்களுக்கு வழி சமைக்கும் வகையில் குறித்த விஜயம் இடம் பெற்றுள்ளது.
இவ் நிகழ்வில் மன்னார் சமூக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அரச உத்தியோகஸ்தர்கள் சமூக ஆர்வளர்கள் அரச சார்பற்ற நிறுவன உழியர்கள் கிராம சேவகர்கள் மத சார் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
குறித்த விஜயத்தின் ஒரு பகுதியாக 18--03-2019 காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட சர்வ மத பிரதிநிதிகளுக்கும் அதே நேரதில் வெலிகம பகுதி சர்வமத பிரதிநிதிகளுக்கும் விசேட ஒன்றுகூடல் இடம் பெற்றது குறித்த ஒன்று கூடலின் போது.
பல் வேறுபட்ட மதம் சார்ந்த நிகழ்வுகளும் அனுபவபகிர்வுகளும் இடம் பெற்றதுன் மன்னார் மாவட்டத்தில் உள்ள மதம் சார்ந்த பிரசித்தி பெற்ற மத ஸ்தலங்களுக்கு விஜயம் செய்யவும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

வெலிகம சர்வ மத குழுவினர் மன்னார் விஜயம்-படங்கள்
Reviewed by Author
on
March 19, 2019
Rating:

No comments:
Post a Comment