கொழும்பில் சிக்கிய 700 கோடி ரூபா பெறுமதியான பொக்கிஷம்! அரசுடமையாக்க நடவடிக்கை -
மாகதுரே மதுஷ் தலைமையில் செயற்படும் பாதாள குழுவிடம் இருந்து 500 மற்றும் 200 கோடி ரூபா பெறுமதியான இரு இரத்தின கற்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
இதில் 500 கோடி ரூபா பெறுமதியான இரத்தின கல், சுங்க சட்டத்தை மீறி இரகசியமாக சவுதியில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் உரிமையாளர் யார் என்பதனை நிரூபிப்பதற்கு சட்டரீதியான ஆவணங்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினக்கல் விற்பனையாளரிடம் உள்ள ஆவணங்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இரத்திக்கல் உரிய நிறுவனத்திடம் சமர்ப்பித்து ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட இரத்தினகல் தொடர்பில் துறைசார் நிறுவனத்திடம் சமர்பித்து, மதிப்பீட்டு அறிக்கை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இரத்தினகல்லின் பெறுமதி மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 11ஆம் திகதி முழுமையான விபரங்களை வெளியிடுவதாக இரத்தினகல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் சிக்கிய 700 கோடி ரூபா பெறுமதியான பொக்கிஷம்! அரசுடமையாக்க நடவடிக்கை -
Reviewed by Author
on
March 09, 2019
Rating:

No comments:
Post a Comment