7 தமிழர்களின் விடுதலைக்காக களத்தில் குதிக்கும் நடிகர் சத்யராஜ் -
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வந்து ஆறு மாதங்கள் ஆகவுள்ள நிலையிலும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் ஏழு பேர் விடுதலைக்காக பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் வரும் 9-ம் திகதி அவர்களின் விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகிறார்.
இந்த போரட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்படும் மனிதச்சங்கிலி போரட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.
பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என கோரியுள்ளார்.
7 தமிழர்களின் விடுதலைக்காக களத்தில் குதிக்கும் நடிகர் சத்யராஜ் -
Reviewed by Author
on
March 08, 2019
Rating:
Reviewed by Author
on
March 08, 2019
Rating:


No comments:
Post a Comment