8 வயது சிறுமியின் மூளைக்குள் இருந்த உயிரினத்தின் 100க்கணக்கான முட்டைகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள் -
6 மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்ட லீமா என்ற சிறுமியை மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது தலையில் வீக்கம் இருந்த காரணத்தினால் ஸ்கேன் செய்து பார்த்ததில் லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இருந்திருக்கின்றன.
ஏற்கனவே அவருக்கு மூளையில் இருந்த வீக்கம் இருந்த காரணத்தால் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டதில் உடல் எடை 40 கிலோவாக அதிகரித்தது.
உடல் எடை அதிகரித்து நடப்பது மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
லீமாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் நியூரோ சிஸ்டிக் சிரோஸிஸ் (neuro cystic sarcosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கான வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவை அனைத்தும் நாடாப்புளுக்களின் முட்டைகள். நாடாப் புழுக்கள் கொடுத்த அழுத்தமானது மூளையை பாதித்துள்ளது, இதனால் முதலில் மூளையில் அழுத்தம் குறைவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னர் கட்டி போல இருந்த முட்டைகளைக் கொல்வதற்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.
மூளையில் உள்ள நாடாப்புழுக்களின் முட்டைகளை அழிப்பதற்கு மருந்து கொடுப்பது இன்னும் கூடுதல் சிக்கல்களையே கொடுக்கும், அவை வலிப்பு மற்றும் மூளை பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தும் என்பதால் மெதுவாக சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள்.
சரியாக வேக வைக்காத முட்டை, காய்கறி மற்றும் மாமிசங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் புழுக்கள் உற்பத்தியாகின்றன. அதாவது சரியாக வேகவைக்கப்படாத உணவுகளில் லார்வாக்கள் இருப்பதால் இவை நாடாப்புழுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்துவிடுகின்றன.

8 வயது சிறுமியின் மூளைக்குள் இருந்த உயிரினத்தின் 100க்கணக்கான முட்டைகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள் -
Reviewed by Author
on
March 07, 2019
Rating:
No comments:
Post a Comment