வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் -
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையை கண்டித்து வவுனியாவில் அடையாள உண்ணா விரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அடையாள உண்ணா விரத போராட்டம் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகளின் பின்னர், ஆலய வளாகத்தில் அமைக்கபட்டருந்த கொட்டகையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சிவராத்திரி தினத்தன்று அருட்தந்தையர் தலைமையிலான குழுவினரால் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டைமையை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தால் குறித்த உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுடன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையினர், சிரேஸ்ட சட்டதரணி மு.சிற்றம்பலம், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், அந்தணர்கள், பெருமளவான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் -
Reviewed by Author
on
March 28, 2019
Rating:

No comments:
Post a Comment