மன்னார் மாவட்டத்தி சமூகசேவகரும் சித்த வைத்திய துறையை வளர்ப்பதில் அர்பணித்த வைத்திய கலாநிதி எஸ்.லோகநாதன் காலமானார்.
இவர் சம்பவம் அன்று காலை மன்னார் பொது வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சேர்க்கப்பட்ட நிலையிலேயே நேற்று நண்பகல் இறந்துள்ளார்.
இவர் மதுரை காமராஐர் பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில்
பட்டதாரியாகவும், மன்னார் மாவட்ட ஆயுர்வேத சங்கத்தின் பொருளாளராகவும்,துரையம்மா அன்பகத்தின் போசகராகவும்
தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஆலோசகராகவும்
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் நிர்வாக
உறுப்பினராகவும் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பல முக்கிய அமைப்புக்ளில் உறுப்பினராக இருந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.
அத்துடன் வறுமை கோட்டுக்குள் வாழும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் சென்றுள்ள மாணவர்கள் பலரின் கல்விக்கு நீண்ட காலமாக உதவிக்கரம் நீட்டி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தி சமூகசேவகரும் சித்த வைத்திய துறையை வளர்ப்பதில் அர்பணித்த வைத்திய கலாநிதி எஸ்.லோகநாதன் காலமானார்.
Reviewed by Author
on
March 28, 2019
Rating:

No comments:
Post a Comment