எலிகளுக்கு Infrared பார்வை வழங்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் -
சிசிடிவி கமெராக்களில் இத் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
இதேபோன்று எலிகளுக்கும் இரவு நேரப் பார்வையை வழங்கும் முயற்சியில் சீன ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான ஆராய்ச்சிகளை சீனாவின் Science and Technology பல்கலைக்கழகமும், அமெரிக்காவிலுள்ள Massachusetts Medical School பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்கின்றன.
இவ் ஆராய்ச்சியின்போது எலிகளுக்கு நனோ துணிக்கைகளை கொண்ட ஊசி மருந்து ஏற்றப்பட்டுள்ளது.
இந்த மருந்தானது பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் இம் மருந்துகள் நேரடியாகவே எலிகளின் கண்களுக்குள் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப் பரிசோதனை வெற்றியளிக்கும் பட்சத்தில் மனிதர்களிலும் இரவுநேரப் பார்வையை ஏற்படுத்துவதற்கு இத் தொழில்நுட்பம் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எலிகளுக்கு Infrared பார்வை வழங்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் -
Reviewed by Author
on
March 02, 2019
Rating:
No comments:
Post a Comment