காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!
காங்கேசன்துறை துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கம் காணிகளை பெற்று கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக தேவையான நிதி இந்திய அரசாங்கத்தின் நிவாரணத்துடன் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான காணியை கைமாற்றிக்கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
இதற்கமைவாக இலங்கை சீமெந்து கூட்டுதாபனத்திற்கு உட்பட்ட சுமார் 15 ஏக்கர் கொண்ட காணியை கைமாற்றி கொடுப்பது சிறந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு இதில் 15 ஏக்கர் காணியை கைமாற்றிக் கொடுப்பதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை! 
 
        Reviewed by Author
        on 
        
March 08, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 08, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment