அரசியலில் களமிறங்கிய பிரபல நடிகை கோவைசரளா! எந்த கட்சியில் இணைந்துள்ளார்
தமிழ் திரையுலகின் தங்களுக்கென்று ஒரு மரியாதையை கொண்டிருப்பவர்கள் ரஜினி-கமல். இதில் ரஜினி நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறிக்கொண்டிருந்த போதே கமல் அதிரடியாக அரசியலில் இறங்கப்போகிறேன் என்று கூறி அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை அறிவித்தார்.
கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம், அதற்கான கொடி போன்றவைகளை அறிவித்தார். இதையடுத்து வரும் மக்களைவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று உலக மகளிர் தினம் சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்த கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டார்.
'பல இடங்களைப் பார்த்திருக்கிறேன். எந்த இடத்துக்குப் போவது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும் போது, இந்த இடம் நல்லதாகத் தெரிந்தது. அதனால் தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். போகிற போக்கைப் பார்த்தால் மக்கள் நீதி மய்யம், மகளிர் நீதி மய்யம் ஆக மாறிவிடும் என நினைக்கிறேன்.
பிரபல திரைப்பட நடிகை கோவை சரளா அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
ஆண் - பெண் இருவரும் இணைந்து செயல்பட்டால், இந்த நாடு நலம்பெறும் என்பது உறுதியாகிறது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல இடங்களில் பல சூழ்நிலைகளில் நாம் நலிந்தும், மலிந்தும் போய்விட்டோம். இனி அந்த நிலை நமக்கு வரக்கூடாது. ஆகவே, வரும் தேர்தலில் அதிகப் பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன. ஆனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் நீதி மய்யம்' ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பல சாதனைகள் செய்திருக்கிறார் கமல் சார். இத்தனை ஆண்டுகாலம் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு சேவை செய்வதற்காக நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சி இனி மகளிர் நீதி மய்யம் கட்சியாக இருக்கின்றது. மகளிருக்கான நீதியினைப் பெற்றுத்தரும் என்கின்ற நம்பிக்கையுடன் நான் கட்சியில் இணைகிறேன் என்று கோவை சரளா அவர்கள் தெரிவித்தார்.
தலைவர் கமல் நடிப்பு வேலையைப் பார்த்தது போதும், இந்த வேலையைப் பார் என்று உத்தரவிட்டதால் வந்துவிட்டேன். முன்பு, தலைவருக்கு ஒரு வார்த்தை கொடுத்திருந்தேன். நீங்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்துக்குப் போனாலும் அங்கு உங்கள் பின்னால் நாங்கள் பல பேர் இருப்போம்" என்று சொல்லியிருந்தேன். ஆகையால், தான் இப்போது அவர் நடக்கும் பாதையிலே, நாங்கள் பின்னால் செல்லத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
அரசியலில் களமிறங்கிய பிரபல நடிகை கோவைசரளா! எந்த கட்சியில் இணைந்துள்ளார்
Reviewed by Author
on
March 09, 2019
Rating:

No comments:
Post a Comment