வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிகழ்வு ஆரம்ப விழா-படங்கள்
மன்னார் மாவட்ட வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிகழ்வானது 04 தினங்களாக மன்/அடம்பன் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் முதல் நாள் நிகழ்வு 07- 03- 2019 காலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்நிகழ்விற்கு மடு வலயக்கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் தலைமை தாங்க
பிரதம விருந்தினராக திரு .எஸ்.சத்தியசீலன் செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடக்கு மாகாணம் அவர்களும்.
சிறப்பு விருந்தினர்களாக
திரு.K.J.பிறட்லி வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார் அவர்களும்
திரு.J.ஜெனிற்றன் உதவி தேர்தல் ஆணையாளர் மன்னார் அவர்களுடன் வலய உதவிப்பணிப்பாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்னர்.
தொடர்ந்து இன்னும் 03 நாட்கள் இப்போட்டிகள் நடைபெற்று இறுதி நிகழ்வானது நிறைவு விழா 10-03- 2019 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிகழ்வு ஆரம்ப விழா-படங்கள்
Reviewed by Author
on
March 08, 2019
Rating:

No comments:
Post a Comment