அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதி திறந்து வைப்பு-(படம்)
நாடளாவிய ரீதியில் உள்ள 200 பாடசாலைகளில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட செயற்திட்டங்கள் ஒரே நாளில் திறக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், மன்னார் மடு கல்வி வலயத்தில் உள்ள அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதி வைகவ ரீதியாக இன்று 01-03-2019 திறந்து வைக்கப்பட்டது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.சத்தியபாலன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
வடக்கில் புதிய கட்டிடத்தொகுதிகள் ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்படும் நிலையில், குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடமும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வில் அருட்தந்தை, பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதி திறந்து வைப்பு-(படம்)
Reviewed by Author
on
March 02, 2019
Rating:
No comments:
Post a Comment