அண்மைய செய்திகள்

recent
-

'இறந்தவருக்கு' உயிர் கொடுத்து சிக்கலில் மாட்டிய மத போதகர்-


'இறந்தவருக்கு' உயிர் கொடுத்து சிக்கலில் மாட்டிய மத போதகர்
சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலை பார்த்து "எழுந்திரு, எழுந்திரு!" என்று மத போதகர் ஒருவர் கத்துவது போன்ற காணொளி ஒன்று தென்னாப்பிரிக்காவில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.

இறந்தவர் மெதுவாக எழந்து நேராக உட்காருகிறார். அங்கு கூடியிருப்போர் ஆச்சர்யமடைகின்றனர். ஆரவாரம் செய்கின்றனர்.

ஆனால், நவீன கால அற்புத செயலாக கூறப்படும் இதனை எல்லாரும் நம்பத் தயாராக இல்லை.

தன்னைத்தானே மத போதகர் என்று அறிவித்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் பங்கெடுத்ததன் மூலம், மத போதகர் ஆல்ப் லுகா இவர்களை அவரது ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொண்டதாக கூறி, இறுதிச்சடங்கு நடத்துகின்ற தலைவர் குழுவால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளார்.

ஜோகனஸ்பர்கில் இந்த போதகரின் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெளிப்புற இடம் ஒன்றில் நிகழ்ந்ததாக கூறப்படும் இறந்தவரை உயிர்பித்தல் நிகழ்வு, இணையதளத்தில் கேலி செய்யப்படுவதோடு, கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

"இவ்வாறான அற்புதங்கள் என்று ஒன்றும் இல்லை," என்று தென்னாப்பிரிக்க கலாசார, மத மற்றும் மொழி உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

"நம்பிக்கை இழந்துளள நமது மக்களிடம் இருந்து பணம் பறிக்க புனையப்பட்டு நிறைவேற்றப்படும் முயற்சிகள் இவை," என்று அது தெரிவித்துள்ளது.

இதில் கலந்து கொள்வோரும் தாங்கள் ஏமாற்றப்படுவதாக கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மூன்று நிறுவனங்கள் "ஏமாற்றம்"

இந்த திட்டத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் மூன்று நிறுவனங்கள், தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளன.

இந்த தேவாலய உறுப்பினர்கள் வித்தியாசமான வழிகளில் தங்களை ஏமாற்றிவிட்டதாக கிங்டம் புளூ, கிங்ஸ் & குயின்ஸ் இறுதிச்சடங்கு சேவை மற்றும் பிளாக் ஃபோனிக்ஸ் நிறுவனங்கள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.

சவத்தை கொண்டு செல்லம் வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுக்க சென்றபோது, கிங்ஸ் & குயின்ஸ் இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்திற்கு நம்பகரமாக தோன்றுவதற்காக பிளாக் ஃபோனிக்ஸ் நிறுவனத்தின் ஸ்டிக்கர்கள் தனியார் காரில் அவர்கள் ஒட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கிங்டம் புளூ நிறுவனத்திடம் இருந்து சவப்பெட்டி வாங்கப்பட்டிருந்ததாக இறுதிச்சடங்குகளை ஏற்பாடு செய்யும் குழுவின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சனையின் நகைச்சுவையான பக்கத்தை பார்த்துள்ள தென்னாப்பிரிக்க மக்கள் பலர் #ResurrectionChallenge என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கேலியாகப் பதிவிட தொடங்கினர்.

ஏற்கெனவே உயிரோடு இருந்தவர்

போதகர் லுகாவின் தேவாலயமான "அல்லேலுயா மினிஸ்டிரி இன்டர்நேஷசனல்" இது பற்றி கருத்து தெரிவிக்க கேட்டுக்கொண்ட பிபிசிக்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை.

ஆனால், த சோவிடான் செய்தி இணையதளமானது இந்த தேவாலயம் இறந்தவர்களை உயிர்பித்தல் பற்றிய அற்புதத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

கராமெர்வில்லி வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, இறந்தவராக கருதப்பட்டவர் உண்மையிலே, ஏற்கெனவே உயிரோடு இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் ஏற்கெனவே தொடங்கியிருந்த அற்புதத்தை போதகர் லுகாவ் நிறைவுபெற மட்டுமே செய்துள்ளார் என்று அல்லேலுயா மினிஸ்டிரி இன்டர்நேஷசனலை மேற்கோள்க்காட்டி "த சோவிடான்" வெளியிட்டுள்ளது.

இறந்தவராக இருந்து உயிர்ந்தெழுத்தவரை, சவப்பெட்டியில் தானே அவ்வாறு இறந்த நிலையில் இருக்க வைத்ததாக உள்ளூர் வானொலியில் ஒருவர் ஒப்புக்கொண்டதால் இந்த நிகழ்வில் மேலதிக சந்தேகங்கள் எழுந்தது என்று பிபிசியின் மில்டன் நகோசி தெரிவிக்கிறார்.

இந்த உயிர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்ட நாளில், உயிர்த்தெழ செய்யப்பட்டதாக கூறப்படும் மனிதர், இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பணியிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார். ஆனால், அவருடைய இறுதிச்சடங்கில்தான் பங்கேற்கிறார் என்ற உண்மையை அவர் கூறவில்லை.


'இறந்தவருக்கு' உயிர் கொடுத்து சிக்கலில் மாட்டிய மத போதகர்- Reviewed by Author on March 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.