திருக்கேதீச்சர ஆலய அலங்கார வளைவு-சர்வமதக்குழுக்களின் நல்லிணக்க கலந்துரையாடல்-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த திருக்கேதீச்சர ஆலய அலங்கார வளைவு தகர்க்கப்பட்டமை தொடர்பில் இரண்டு மதங்களுக்கிடையில் முறுகல் நிலையேற்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க 04 நாட்கள் வளைவு வைக்க அனுமதி வழங்கியதுடன் 04 நாட்கள் நிறைவில் 07-03-2019 மாலை வளைவு மீண்டும் அகற்றப்பட்டுள்ளது.
வளைவு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் சமயங்களுக்கிடையிலான சமாதானப்பேச்சுக்களையும் சமரசப்பகிர்வினையும் ஏற்படுத்தி மதங்களுக்கிடையில் ஒற்றுமையினையும் நல்ல புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் வகையில் சர்வமதக்கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில்
சமாதானப்பேரவையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட சர்வமதக்குழு இன்று வெள்ளிக்கிழமை மதியம் 08-03-2019 MARR-மார் அலுவலகத்தில் நல்லிணக்க கலந்துரையாடல் நடைபெற்றது.
அக்கலந்துரையாடலில்
மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் A.விக்ரர் சோசை அடிகளார்
மன்னார் திருக்கேதீச்சர ஆலய பரிபாலன சபையின் செயலாளர் திரு.இராமகிருஸ்ணன் அவர்களும்
மன்னார் சாந்திபுர விஹாரை சங்.விமலந்த தேரர் அவர்களும்
மன்னார் உப்புக்குளம் ஜூம்மா பள்ளிவாசலின் மௌலவி ஆஸிம் அவர்களும்
இவர்களுடன் ஏனைய மதத்தலைவர்களும் மன்னார் மாவட்டத்தின் 05 பிரதேசங்களை பிரதிநிதிப்படுத்தும் சர்வ மதப்பிரதிநிதிகள் அமைப்புகளின் பிரதிநிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்தனர்.
விசேட விதமாக கொழும்பில் இருந்து வருகை தந்த
NPC- தேசிய சமாதானப்பேரவையின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் M.S.மூக்கையா அவர்களும்
தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் கலாநிதி ஜோ வில்லியம்ஸ் அவர்களும் கலந்து கொண்டு இரண்டு சமயத்தவர்களுக்கும் இடையில் அன்று நடந்த விடையங்களின் முழுமையான தகவல்களினையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.
சமூகம் மற்றும் சமயங்களுக்கிடையிலான இவ்வாறான பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளை பெறுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் சமாதானமான முறையில் கலந்துரையாடி உண்மைகளையும் நன்மைகளையும் அறிந்து அதன்படி செயலாற்ற வேண்டும்.
சமயங்கள் போதிக்கின்ற ஒற்றுமை-மனிதப்பண்பு-மன்னிப்பு-விட்டுக்கொடுப்பு இரக்கம்-அன்பு இவைகளையே வாழ்வாக கொண்டு வாழ்வதற்கு நல்ல புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் அவசியம்.
மற்ற மாவட்டங்களைவிட மன்னார் மாவட்டமானது சமய சமூக ஒற்றுமையான மக்கள் வாழும் மாவட்டத்திற்கு முன்னுதரணமாக இருந்துள்ளது ஆனால் தற்போது சில தவிர்க்கமுடியாத இக்காரணங்களால் சமூகங்களுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது அதை நாம் தான் முறியடித்து இன மத நல்லிணக்கத்தினை பேணுவதற்கு துணையாக ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
(இரண்டு மதத்தினை பிரதிநிதிப்படுத்தி பேசிய தமது கருத்தினை முழுமையாக சமர்ப்பித்தனர் ஒவ்வொருவரும் பொறுமையாக செவிமடுத்தனர் வரவேற்கதக்க விடையம்)
கருத்துக்கள் பகிர்வில்----
- சில ஊடகங்கள் சமய நல்லுறவை பாதிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.(கண்டி திஹன பிரச்சினை-சமூகவலைத்தளம் முடக்கம்)
- சமூகவலைத்தளங்கள் தவறான சொற்பிரயோகங்கள் இழிவான வாதபிரதிவாதங்கள் ஈடுபட்டுவருகின்றமை.
- ஒரு சிலரின் முரண்பாடான கருத்துக்களும் செயல்பாடுகளும்
- சிலரின் பொறுப்பற்ற செயல்பாடுகள் பிரச்சினையை தடுப்பதற்கும் முயலாமை.
நமக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் பிணக்குளை நாம்தான் சரியான முறையில் அணுகி தீர்க்கவ்வேண்டும் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் சில புல்லுருவிகளின் ஊடுருவலுக்கு இடம்கொடாது மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக மன்னார் எப்போதும் திகழவேண்டும்.
திருக்கேதீச்சர ஆலய அலங்கார வளைவு-சர்வமதக்குழுக்களின் நல்லிணக்க கலந்துரையாடல்-படங்கள்
Reviewed by Author
on
March 09, 2019
Rating:

No comments:
Post a Comment