மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் மற்றுமொரு வரப்பிரசாதம்! -
அரசாங்க பாடசாலைகளில் தரம் 13 வரையிலான கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
தரம் 13 உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் கற்கைநெறியை தொடரும் மாணவர்கள் 2ஆம் கல்வி ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட தொழில் விடயத்துக்கான தேசிய தொழில் ஆற்றல் (NVQ) 4 மட்ட சான்றிதழை வழங்குவதற்கு அனுமதியுள்ள தொழில் பயிற்சி நிறுவனத்தில் கல்வியை பெறவேண்டியுள்ளது.
இவ்வாறான தொழில் பயிற்சி நிறுவனங்கள் பல முக்கிய நகரங்களில் அமைந்துள்ளமை மற்றும் சில பயிற்சி நிறுவனம் ஒரு இடத்தில் மாத்திரம் அமைந்திருப்பதன் காரணமாக சில மாணவர்கள் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக தொகையை செலவிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை ஊடாக நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்காக நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் மற்றுமொரு வரப்பிரசாதம்! -
Reviewed by Author
on
March 28, 2019
Rating:

No comments:
Post a Comment