பிரிகேடியர் பிரியங்க தொடர்பில் லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! -
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கை மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்து அறுப்பேன் என சைகை மூலம் காட்டினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அவர், கடந்த ஜனவரி மாதம் குற்றவாளியாக லண்டன் நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டார்.
பிரித்தானிய பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் துன்புறுத்தல் எனும் அடிப்படையிலேயே இலங்கை இராணுவ வீரர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றவாளியாக இனங்காணப்பட்டு லண்டன் நீதிமன்றத்தால் தீர்பளிக்கப்பட்டது.
இத்தீர்ப்பையே கேள்விக்குள்ளாக்கி தற்போது மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கு மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை மீள் விசாரணைக்கு வரும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பிரியங்க தொடர்பில் லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! -
Reviewed by Author
on
March 17, 2019
Rating:
Reviewed by Author
on
March 17, 2019
Rating:


No comments:
Post a Comment