மட்டக்களப்பில் ஜனாதிபதியின் திட்டத்தால் 178 ஆயிரம் குடும்பங்களுக்கு நன்மை -
ஜனாதிபதியினால் நாடெங்கும் முன்னெடுக்கப்படும் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தும் வகையிலான விசேடநிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பொதுமக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்த நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவை முன்னெடுக்கப்படக்கூடிய நிலையுருவாகியுள்ளதகாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்த திட்டம் ஊடாக மாகாணசபை 102 மில்லியன் ரூபாவினை நான்கு தினங்களுக்கு செலவு செய்யவுள்ளதுடன் இந்த நாட்டிகளில் பொதுமக்களினால் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த செயற்றிட்டம் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 178 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைக்கூடியதாக இருக்கும் எனவும் இதன் ஊடாக 1115 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதேச செயலகங்கள் ரீதியாக ஒவ்வொரு கிராமத்திலும்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் கிராமசக்தி வேலைத்திட்டங்கள் 161 கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இவற்றினால் பொதுமக்கள் பெரும் நன்மையடைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதி நாளான 12ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் பொதுமக்களுக்கான சேவையின் பயன்கள் முழுமையாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தென்னைக்கன்று ஒன்றும் வழங்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
நாளை திங்கட்கிழமை தொடக்கம் பிரதேச செயலகங்கள் ரீதியாக தமக்கான தேவையினை பொதுமக்கள் நிவர்த்தி செய்து கொள்ளமுடிவதுடன் விரைவாக சேவைகளைப்பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஜனாதிபதியின் திட்டத்தால் 178 ஆயிரம் குடும்பங்களுக்கு நன்மை -
Reviewed by Author
on
April 08, 2019
Rating:
Reviewed by Author
on
April 08, 2019
Rating:


No comments:
Post a Comment