மன்னார் இந்து மதம் பீடம் மற்றும் மன்னார் இந்துக் குருமார் பேரவை-கண்டன அறிக்கை
நேற்றைய தினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் மற்றும் பல இடங்களிலும் நடத்தப்பட்ட இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மன்னார் இந்து மதம் பீடம் மற்றும் மன்னார் இந்துக் குருமார் பேரவை தன்னுடைய வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது என மன்னார் இந்து மத பீடத்தின் தலைவரும் இந்துக் குருமார் பேரவையின் தலைவருமான சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட இந்து மத பீடம் மற்றும் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை இனைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட உள்ளனர்
அவர் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் மத வழிபாட்டு தலங்களையும் விடுதிகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இச் சம்பவமானது நாட்டின் அமைதியினை குலைக்கும் நாசகார செயலாகும் . இன்று இயேசுபிரானின் உயிர்ப்பு நாளாகிய ஈஸ்டர் திருநாளிலே இன்று காலையிலேயே பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் குழுமியிருந்த கொச்சிக்கடை தேவாலயத்திலும் ஏனைய இரு தேவாலயத்திலும் விடுதிகளிலும் இவ்வாறான வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதை கேள்வியுற்று நாம் அதிர்ச்சியும் மிகவும் வேதனை அடைகின்றோம். இச்சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் மிக வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
இச்சம்பவமானது மிகவும் மிலேச்சத்தனமான ஒரு தாக்குதல் சம்பவம் ஆகவே நாம் கருதுகின்றோம் இச்சம்பவம் தொடர்பாக எமது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலரும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை நடைபெற்ற
மோசமான இச்சம்பவத்தினால் பலர் உயிரிழந்தும் பலர் காயமுற்றும் உள்ளனர் உயிரிழந்த குடும்ப உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்போர் விரைவில் குணமடைந்து தேக ஆரோக்கியத்தோடு அவர்கள் இல்லம் திரும்ப நாங்கள் இறைவனை பிரார்த்தித்து நிற்கின்றோம்.
அத்தோடு வைத்தியசாலைகளில் இரத்த தானம் வழங்க உடனடியாக முன்வந்து இணைந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டு நிற்கின்றோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள்
தலைவர்
இந்து மத பீடம் மற்றும்
இந்துக் குருமார் பேரவை
மன்னார் இந்து மதம் பீடம் மற்றும் மன்னார் இந்துக் குருமார் பேரவை-கண்டன அறிக்கை
Reviewed by Author
on
April 22, 2019
Rating:
Reviewed by Author
on
April 22, 2019
Rating:


No comments:
Post a Comment