அமைச்சர் ரிஷாட்டிடம் பொலிஸார் விசாரணையா?
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரியவருகிறது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு சற்று முன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ன.
அமைச்சரின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அவ்வாறான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் விசாரணைக்கு அமைச்சர் அழைக்கப்படவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாட்டிடம் பொலிஸார் விசாரணையா?
Reviewed by Admin
on
April 23, 2019
Rating:
Reviewed by Admin
on
April 23, 2019
Rating:


No comments:
Post a Comment