தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களே தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் – ராஜித
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று புலனாய்வுத் துறையினர் தகவல்களை வெளியிட்டள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில், இன்று திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சிலர், தமது காலங்களில் இலங்கையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அன்றும் இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், எமது பாதுகாப்பில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என்பதை நாம் தற்போது ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குல்களில் உயிரிழந்த அனைவரது உறவினர்களுக்கும் நான் எமது கவலையை வெளியிட்டுக்கொள்கிறோம். இந்தத் தாக்குதல் தொடர்பில், சர்வதேச புலனாய்வுப் பிரிவினரால் ஏப்ரல் 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
9 ஆம் திகதி இதுதொடர்பிலான முதலாவது கடிதம், பாதுகாப்பு அமைச்சினால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில், சந்தேகநபர்களின்; பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. சாரான் ஹஸ்மின், ஜல்ஹல் பித்தால், ரில்வான் சஜித் மௌலவி, சயிட் மில்வான் ஆகியோரது பெயர்கள் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த கடிதத்தில் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இது மிகவும் பிழையானதொரு செய்றபாடாகும். முதலில் நாம் தேசிய பாதுகாப்பு தொடர்பிலேயே சிந்தித்திருக்க வேண்டும்.
தாக்குதல் சம்பவம் இடம்பெற்றவுடன்தான், பிரதமருக்கு இவ்வாறானதொரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.” என கூறினார்.
தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களே தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் – ராஜித
Reviewed by Admin
on
April 23, 2019
Rating:
Reviewed by Admin
on
April 23, 2019
Rating:



No comments:
Post a Comment