ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வேட்பாளரைக் களமிறக்கத் தயாராகிறது? -
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவுக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு இதுவரையில் உரிய தீர்வொன்று எட்டப்படாத நிலையிலேயே, இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நீண்ட காலமாக ஜனாதிபதித் தேர்தலுக்காக தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தாததன் காரணமாக, தமிழ் மக்களின் நலன் குறித்து சிந்திப்பதற்கான தலைவரென்று தற்போது இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில், இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வேட்பாளரைக் களமிறக்கத் தயாராகிறது? -
Reviewed by Author
on
April 01, 2019
Rating:

No comments:
Post a Comment