தேர்தல் குறித்த பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்வி.. நடிகர் ரஜினிகாந்தின் ஆச்சரிய பதில்! -
சென்னையில் நடந்த ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற ஒலி வடிவ புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட அவர் பேசும்போது, பரமஹம்ச யோகானந்தரின் கருத்துக்களை அனைவரும் பின்பற்றி, வாழ்வில் அமைதி பெற வேண்டும். அவரின் கருத்துக்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கை நன்மையை நோக்கி செல்லும்.
அனைவரும் நம்பிக்கையோடும், பக்தியோடும் புத்தகத்தில் இருப்பதை அப்படியே பின்பற்ற வேண்டும். கோபம் குறைந்தால் வாழ்க்கையில் துன்பத்தின் தாக்கம் இருக்காது’ என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும், தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை.
ஆனால், ‘பரமஹம்ச யோகானந்தரின் ஆடியோ புத்தகத்தை கேட்டு, அனைவரும் பயனடைய வேண்டும். அமைதி தான் முக்கியம். மக்கள் இந்த புத்தகத்தை படித்துவிட்டு அமைதியை நோக்கி செல்ல வேண்டும்’ என்று மட்டுமே கூறிவிட்டு சென்றுள்ளார்.
தேர்தல் குறித்த பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்வி.. நடிகர் ரஜினிகாந்தின் ஆச்சரிய பதில்! -
Reviewed by Author
on
April 01, 2019
Rating:
No comments:
Post a Comment