அண்மைய செய்திகள்

recent
-

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


கோலிவுட்டில் மட்டும் அல்ல டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளார் நயன்தாரா. அதனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் எந்தெந்த நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

நயன்தாரா

நயன்தாரா தெலுங்கு படத்தில் நடிக்க ரூ. 3 முதல் 4 கோடி சம்பளம் வாங்குகிறார். டோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர் தான். கோலிவுட்டில் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் கேட்கிறார் நயன்.

அனுஷ்கா

டோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள அனுஷ்கா படம் ஒன்றுக்கு ரூ. 2 முதல் 3 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பாகமதி வெற்றி பெற்றது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார் அவர்.

காஜல்

டோலிவுட்டின் சமத்து நடிகையான காஜல் அகர்வால் படம் ஒன்றுக்கு ரூ. 2 கோடி வாங்குகிறார். அவர் சீனியர்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை ஜோடியாக நடித்து வருகிறார்.

தமன்னா

சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் படம் ஒன்றுக்கு ரூ. 1.2 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். சமந்தா தனது கணவருடன் சேர்ந்து நடித்த மஜிலி அண்மையில் வெளியாகி ஹிட்டானது.

பூஜா ஹெக்டே

டோலிவுட்டில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள பூஜா ஹெக்டே படம் ஒன்றுக்கு ரூ. 1.5 கோடி வாங்குகிறார். அவர் பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்

மகாநதி படம் மூலம் தெலுங்கு ரசிகர்களை இம்பிர9செய்த கீர்த்தி சுரேஷ் படம் ஒன்றுக்கு ரூ. 1 கோடி வாங்குகிறார். கீர்த்தி போனி கபூர் தயாரிக்கும் படம் மூலம் பாலிவுட் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமான ரஷ்மிகா மந்தனா ரூ. 75 லட்சம் முதல் ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார். ரகுல் ப்ரீத் சிங் படம் ஒன்றுக்கு ரூ. 60 லட்சம் முதல் ரூ. 1 கோடி வாங்குகிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Reviewed by Author on April 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.