மன்னார் புதுக்குடியிருப்பில் 13 நபர்கள் கைது-விளக்கமறியலில் வைத்து விசாரிக்க கட்டளை
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டுத்
தாக்குதலைத் தொடர்ந்து மன்னாரில் இஸ்லாமியர் செறிந்து வாழும் பகுதிகள்
கடந்த ஓரிரு தினங்களாக சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டத்தில்
சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தொடர் விசாரனைக்காக
வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து மன்னார் பகுதியிலும் பிரதான வீதிகள் தோறும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் பிரயாணிகள், வாகனங்கள் பாதுகாப்பு படையினரின் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் கடந்த ஓரிரு தினங்களாக மன்னார் பகுதியிலுள்ள இஸ்லாமியர் வாழும் கிராம பகுதிகளும் பாதுகாப்பு படையினரின் கடும் சோதனைக்கு
உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்போது மன்னார் மூர் வீதி, புதுக்குடியிருப்பு, விடத்தில்தீவு ஆகிய
முஸ்லீம் பகுதிகள் முப்படைகளாலும் சுற்றிவளைக்கப்பட்டத்தில் சிலர்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் பொலிசாரால்
ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் மன்னார் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்ட 13 சந்தேக நபர்களை
மன்னார் பொலிசார் நேற்று செவ்வாய் கிழமை (30.04.2019) மன்னார்
மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தி வழக்கு தாக்கல் செய்கையில் கட்டளை தளபதிக்கு கிடைக்க்பபெற்ற இரகசிய தகவலில் பிரகாரம் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகவே இவர்களை தொடர்ந்து விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதால் இவர்களை எதிர்வரும் திங்கள் கிழமை (06.05.2019) வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க மன்றில் அனுமதியை பொலிசார் கோரியதைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கள் கிழமை06-05-2019 வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதே தினம் விடத்தில்தீவு பகுதியில் முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு மன்றில்
ஆஜராக்கப்பட்டனர். இவர்களின் கடைக்குப் பின்னால் டைனமைட் திரிகள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் நான்கு நபர்களும் சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களையும் பொலிசார் செவ்வாய் கிழமை (30) மன்னார் மாவட்ட நீதவான்
ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இவர்களையும் எதிர்வரும் திங்கள் கிழமை 06-05-2019 வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Reviewed by Author
on
May 02, 2019
Rating:
Reviewed by Author
on
May 02, 2019
Rating:

No comments:
Post a Comment