உலகிலேயே விலையுயர்ந்த மருந்து இதுதானாம்! கோடிகளில் விற்பனை விலை -
வேலையில் அதிக பளு, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட பலர் மாத்திரை அல்லது மருத்துகளை எடுத்து வருகின்றனர். பெரிய சிகிச்சைகளுக்கும் மருந்துகள் தான் மூலப்பொருட்களாக உள்ளன.
ஆனால், இவ்வாறான மருந்துகளின் விலையும் மிகவும் அதிகம். சிகிச்சை மற்றும் அதற்கான பயன்பாட்டின் அளவு குறித்து மருந்துகளின் விலை மாறுபடுகிறது. இந்நிலையில், உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் நேற்றைய தினம், உலக அளவில் விலை அதிகமான மருந்து எது என்பதை அறிவித்தது.
அதன்படி, ‘Zolgensma (Onasemnogene Abeparvovec-Xioi)' என்ற மருந்து தான் உலகின் விலை உயர்ந்த மருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2.1 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 கோடி).

மிகவும் அரிதான முதுகெலும்பு மரபணு சிகிச்சைக்கு பயன்படும் நோவர்ட்டீஸ் என்ற மருந்துகள் தயாரிப்பு நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இந்த மருந்தினை மரபணுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றால் சுமார் 14 கோடி செலவாகுமாம்.
இதுகுறித்து, நோவர்ட்டீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாஸ் நரசிம்மன் கூறுகையில், ‘இந்த பொறுப்பினை ஏற்றது முதல் எங்கள் அணுகுமுறையினால் நோயாளிகள் சிறந்த முறையில் குணமடையவே செயல்பட்டு வருகிறோம். இன்னும் புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள் மூலம் பல்வேறு நோயாளிகள் பயன்பெற உதவுவோம்’ என தெரிவித்துள்ளார்.
உலகிலேயே விலையுயர்ந்த மருந்து இதுதானாம்! கோடிகளில் விற்பனை விலை -
Reviewed by Author
on
May 26, 2019
Rating:
No comments:
Post a Comment