ஒரு தீண்டதகாதவனின் அறிவுரையை ஏற்க முடியாது - அம்மனிதன் எழுதியதே இன்று இந்தியா நாட்டின் சட்டம்... -
அவர் கடந்து வந்த வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ராம்ஜி சக்பால் - பீம்பாய் இணையருக்கு 14வது குழந்தையாக பிறந்தார் அம்பேத்கர். மத்திய பிரதேசத்தில் உள்ள 'மோ' என்ற இடத்தில் 1891,ஏப்ரல் 14 இல் பிறந்தார்.இவருடைய தந்தை ராம்ஜியும், பாட்டனாரும் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். மேலும், மோ பகுதி இராணுவத்தின் தலமையிடமாக செயல்பட்டது. இவ்வாறு பெருமளவில் இந்திய இராணுவத்துடன் தொடர்பில் உள்ளவர் அம்பேத்கர்.

அம்பேத்கரின் ஐந்தாம் வயதில் மராத்தி மொழி பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இவரது பள்ளி ஏட்டில் அவர் பெயர் 'பீமா ராம்ஜி அம்பாவடேகர்' இது அவர் இயற் பெயராக குறிப்பிடப்படுகின்றது.
இவரது பள்ளி படிப்பில் பெரும்பாலான நாட்கள் தீண்டாமை கொடுமை வாட்டி வதைத்தது. பள்ளியில் தனியாக அமர வைக்கப்பட்டார். மேலும் சமஸ்கிரம் என்னும் மொழியை கற்றுகொடுக்க ஆசிரியர் மறுத்துவிட்டார். காரணம் சமஸ்கிரதம் இந்துகள் கோவில்களில் வாசிக்கும் மொழி. அத்தகைய தெய்வீக மொழியை தாழ்த்தப்பட்டவர் கற்றுகொள்ள தகுதியில்லை என்று ஒடுக்கப்பட்டார்.
இவரது இயற் பெயரான 'பீமா ராம்ஜி அம்பாவடேகர்' என்ற பெயரை இவர் மீது அன்பும் அக்கரையும் கொண்ட பிராமண குலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது குடும்ப பெயரான அம்பேத்கர் என்ற பெயரை வழங்கினார் என்ற கருத்து நிலவுகின்றது.
ஆனால் இது உண்மை அல்ல முற்றிலும் பொய்யானது என்றும் மற்றொரு சாரார் கூறிவருகின்றனர்.
படிப்பிற்காக, மன்னர் மஹாராஜா சாயாஜிரால் கெய்க்வாடால் அளிக்கப்பெற்ற மாத உதவி தொகையான ரூபாய் 25-னை கொண்டு,தன் கல்லூரி படிப்பை எல்பின்ஸ்டனில் தொடர்ந்தார். அக்காலத்தில் இழிவுபடுத்துதல் எங்கும் காணப்பட்டது. உணவகங்களில் தேனீர், நீர் மறுக்கப்பட்டன.
கல்லூரி படிக்கும் காலத்திலேயே அம்பேத்கரின் தந்தை இறந்தார். இது அவரது மனதை வெகுவாக பாதித்தது. பட்டய படிப்புக்கு பிறகு, பரோடாவில் அரசு பணியை ஏற்றார்
தொடர்ந்து 'லண்டன் பொருளாதார அரசியலறிவு பள்ளிக்கு ஒரு பட்டதாரி மாணவனாக சென்றார். பரோடா மன்னர் உதவித்தொகை நிறுத்திவிட்டதால்,அவருடைய எம்.எஸ். சி ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பரோடா மன்னரிடம் படைத்துறை தலைவாரக பணியாற்றினார்.
மும்பைக்கு திரும்பிய அம்பேத்கர், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க துவங்கியதுடன், பத்திரங்களில் அறிவுரை வழங்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார். இதில் பல வாடிக்கையாளர்கள் ஒரு தீண்டதகாதவனின் அறிவுரை ஏற்க முடியாது என்று அவரிடம் வர மறுத்துவிட்டனர்.
ஆசிரியர் பணியை தொடர்ந்த அவரின் உரையை கேட்க பல மாணவர்கள் திரண்டன.
1921ஆம் ஆண்டு காலத்தில் தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றியவாறே மூன்று புத்தகங்கள் வெளியிட்டார்.
1923 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சங்கத்தில் சேர்க்கப்பட்டாலும் வாதிடும் தொழிலுக்கு தீண்டாமை தடையாக இருந்தது.
பின் 1927ஆம் ஆண்டு ”பகிஸ்கரிக் பாரத்” என்ற இதழை தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக எழுதி வந்தார்.

1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்
அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் கடுமையாக வலியுறுத்தினார்.
இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.
பின், தனது நீண்டநாள் சிந்தனைகளின் அடிப்படையில் 1956ஆம் ஆண்டு புத்தமதத்தில் இணைந்தார். 1956ஆம் ஆண்டில் உலக புத்தமாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இவரை ”நவீன புத்தர்” என்று போற்றினர்.
தொடர்ந்து இந்திய விடுதலை அடைந்ததும் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், இந்திய அரசியல் சாசனத்தின் தலமை சிற்பியாகவும் செயல்பட்டார். இவர் தலமையில் முதல் அரசியல் சட்டம் இந்தியாவில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு நாடாளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.
அம்பேத்கருக்கு இறுதி காலகட்டத்தில் சுலபமான வாழ்க்கையாக இருக்கவில்லை. மற்றவரின் உதவியின்றி அசையவும் சிரமப்பட்டார். 1956ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி காலமானார்.
தாழ்தப்பட்டவர் என்று ஒதிக்கினாலும், இந்தியாவின் சட்டங்கள் மறக்கபடாதவரை அம்பேத்கரின் நினைவுகள் அழிவதில்லை...
ஒரு தீண்டதகாதவனின் அறிவுரையை ஏற்க முடியாது - அம்மனிதன் எழுதியதே இன்று இந்தியா நாட்டின் சட்டம்... -
Reviewed by Author
on
May 19, 2019
Rating:
No comments:
Post a Comment