மன்னார் பள்ளிமுனையில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவர் கைது-படம்
மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை 20-05-2019 இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேறு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்ஸீம் இளைஞர்கள் பிடிக்கப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து தமிழ் மக்களின் கிராமங்களில் அச்ச நிலை ஏற்பட்டிருந்ததோடு, கிராம மக்களும் விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் பள்ளிமுனை தேவாலய நிர்வாகத்துடன் இணைந்து கிராம மக்கள் இரவு நேரங்களில் தமது கிராமத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் இரண்டு இளைஞர்கள் பள்ளிமுனை கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளனர்.
குறித்த நபர்கள் மீது சந்தேகம் கொண்ட பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை பிடித்து விசாரனைகளை மேற்கொண்ட போது வேறு பட்ட கருத்துக்களை கூறியுள்ளனர்.
மேலும் குறித்த இருவரும் கற்பிட்டி மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.உடனடியாக குறித்த இருவர் தொடர்பிலும் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பள்ளிமுனை கிராமத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸாரிடம் குறித்த சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற மன்னார் பொலிஸார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த இரு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரனைகளுக்கு உற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
May 21, 2019
Rating:

No comments:
Post a Comment