அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு! தீவிரவாத அமைப்பின் சொத்து விபரம் வெளியானது -


இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுதாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் சொத்து விபரங்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, தாக்குதல் நடத்திய தீவிரவாத குழுவிற்கு சொந்தமானது என கூறப்படும் 140 மில்லியன் ரூபாய் நிதி குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பயங்கரவாத குழுவிற்கு சொந்தமானது என கருதப்படும் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பணத்தில் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஏனைய நிதி வங்கி கணக்குகளில் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்குகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பயங்கரவாத குழுவின் சொத்துக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டு, அவை அரசுடமையாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 73 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு! தீவிரவாத அமைப்பின் சொத்து விபரம் வெளியானது - Reviewed by Author on May 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.