இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் கனேடிய மேயருக்கு எதிர்ப்பு! -
இலங்கையில் 1983இலிருந்து 2009 வரை 26 ஆண்டுகளாக சிவில் யுத்தம் நடைபெற்றபோது தமிழர் இனப்படுகொலை நடந்தது என்பதை ஏற்றுக் கொண்டதற்காக மேயர் Patrick Brownக்கு எதிராக Brampton City Hallக்கு வெளியே சிங்களர்கள் கூடினர்.
Brown மற்றும் Brampton கவுன்சிலர்கள் சமீபத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர்.
மசோதா 104, தமிழர் இனப்படுகொலை கல்வி வார சட்டம் என்று பெயரிடப்பட்ட அந்த தீர்மானத்தை விஜய் தணிகாசலம் என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் அறிமுகம் செய்தார்.
அந்த மசோதா மே மாதம் 18 ஆம் திகதியை ஒவ்வோராண்டும் தமிழர் இனப்படுகொலையை நினைவு கூறும் நாளாக கொண்டாடப்பட கோருவதோடு, அந்த வரலாற்று நிகழ்வுகளைக் குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோருகிறது.
கனடாவில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் வாழும் அதே நேரத்தில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சிங்களர்களும் வாழ்கிறார்கள்.

அவர்கள் Brown இனப்படுகொலை நடந்ததாக ஏற்றுக் கொள்வதை விமர்சித்து பதாகைகளை ஏந்தியவாறு Brampton City Hallக்கு வெளியே கூடினர்.
அவர்கள் வைத்திருந்த பதாகை ஒன்றில், ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்தான் இனப்படுகொலை, என்பதன் விளக்கத்தின்படி பார்த்தால், இலங்கையில் அது நடக்கவில்லை என்பது முதலான பல வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையோ மற்றெந்த நாடோ இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக அறிவிக்கவில்லை.
இது தமிழ் கனேடியர்களின் வாக்குகளை பெறும் அரசியல் தந்திரம்.
Brown மற்றும் Brampton கவுன்சிலர்களுக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன, எனவே அவர்கள் தாங்கள் கூறியதை வாபஸ் வாங்க வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்திக் கொண்டிருந்தனர்.
தமிழர் இனப்படுகொலை குறித்து Brown அளித்த பேட்டி ஒன்றை இங்கு காணலாம்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் கனேடிய மேயருக்கு எதிர்ப்பு! -
Reviewed by Author
on
May 26, 2019
Rating:

No comments:
Post a Comment