மன்னாரில் தீயணைக்கும் நிலையம் உடன் நிறுவப்பட வேண்டும் மன்னார் நகர சபைக் கூட்டத்தில் தெரிவிப்பது.
மன்னாரில் தீயணைக்கும் படை வசதியின்மையால் மன்னார் பகுதியில் தீ அனர்த்தம் ஏற்படும்போது பெரும் பாதிப்புக்களை மக்கள் எதிர்கொள்ளும் தன்மையே காணப்படுகின்றது. பிரதமர் மன்னரருக்கு வந்து மன்னாரில் தீயணைக்கும் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றப் படாது இருப்பது கவலை அளிப்பதாக மன்னார் நகரசபை உறுப்பினர் மைக்கல் கொலின் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த செவ்வாய் கிழமை (21) மன்னார் நகரசபையின் 15வது மாதாந்த அமர்வு தலைவர் அன்ரன் டேவிட்சன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்பொழுது மன்னார் நகரசபை பகுதியில் வீடு ஒன்று எரிந்து கொண்டிருப்பதாகவும் அதை உடனடியாக அனைக்க முடியாத காரணத்தால் அவ் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான மைக்கல் கொலின் இவ் சபையில் இவ் விடயமாக உரையாற்றுகையில்
இவ் வருட ஆரம்பத்தில் எம் நாட்டின் பிரதமர் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கிணங்க விரைவில் மன்னாரில் தீயணைக்கும் நிலையம் அமைக்கப்படும் என உத்தரவாதம் வழங்கியிருந்தார்
ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுத்தமாதிரி எமக்கு தெரியவில்லை
மன்னாரில் அடிக்கடி தீ அர்த்தங்கள் ஏற்பட்ட வண்ணம் காணப்படுகிறது. ஆகவே இவ் சபையினூடாக மன்னாரில் தீயணைக்கும் நிலையம் ஒன்றை விரைவில் பெற்றுக் கொள்ள ஆவண செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அவ் கூட்டத்தில் இது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Reviewed by Author
on
May 24, 2019
Rating:

No comments:
Post a Comment