மன்னாரில் 93 கிலோ கேரளா கஞ்சாப் பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது-(படம்)
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் எரி பொருள் நிறப்பும் நிலையத்திற்கு அருகில் தனியார் போரூந்து ஒன்றில் இருந்து ஒரு தொகுதி கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த பேரூந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று 22-05-2019 புதன் கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடைப்படையில் விரைந்து செயல்பட்ட பொலிஸார் திருக்கேதீஸ்வரம் எரிபொருள் நிறப்பும் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றை சோதனைக்கு உற்படுத்திய போது, குறித்த பேரூந்தின் பின் ஆசனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 93 கிலோ கேரளா கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு,குறித்த பேரூந்தின் உரிமையாளரான நானாட்டான் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
-குறித்த கேரளா கஞ்சா பொதிகள் சுமார் 93 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு,மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
May 24, 2019
Rating:

No comments:
Post a Comment