ஜேர்மனி வில் அம்பு மரணங்கள்: பொலிஸ் விசாரணையில் அவிழ்ந்த மர்ம முடிச்சு! -
சனிக்கிழமை பவேரியாவின் Passau நகரிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றில் அம்புகளால் கொல்லப்பட்ட மூவரின் உடல்களும், Wittingen நகரிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் இரண்டு பெண்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த மரணங்களின் பின்னணி பெரும் மர்மமாக இருக்க, பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராத பல உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
ஹொட்டல் அறையில் உயிரிழந்து கிடந்தவர்களில் Torsten Weiss (53), Kerstin Enders(33) ஆகிய இருவரும் கைகோர்த்தபடி தங்கள் படுக்கையில் படுத்தபடி இதயத்தில் அம்பு பாய்ந்து உயிரிழந்திருந்தார்கள்.
மூன்றாவது நபரான Farina Caspariதான் (30)படுக்கையில் இறந்து கிடந்த மற்ற இருவரையும் அம்பெய்து கொன்றிருக்கிறார்.
பல மைல் தொலைவில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உயிரிழந்த ஒரு 35 வயது பெண், ஹொட்டலில் உயிரிழந்து கிடந்த Farinaவின் மனைவி, அதாவது இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.
அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பும் Farinaவுக்கு சொந்தமானது.
அவருடன் இறந்து கிடந்த 19 வயது பெண் யாரென்று தெரியவில்லை.
ஹொட்டலில் இறந்து கிடந்தவர்கள் மத்திய காலகட்ட கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை, அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களான வில் அம்புகள், உடை மேக் -அப் என அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் காட்டிக் கொடுத்துள்ளன.
இது விருப்பப்பட்டு கோரப்பட்ட கொலை மற்றும் தற்கொலை என பொலிசார் முடிவு செய்துள்ளார்கள்.
அதாவது மத்திய கால கட்ட முறைமையின்படி இறக்க விரும்பிய Torsten Weiss மற்றும் Kerstin Enders ஆகிய இருவரின் கோரிக்கையின் பேரில், Farina Caspari அவர்களை அம்பெய்து கொன்று விட்டு தன்னையும் அம்பால் கொன்றிருக்கிறார் என்று பொலிசார் கருதுகிறார்கள்.
Weissஇன் முன்னாள் வீட்டு உரிமையாளரான Alexander Kruger என்பவர், இறந்த அனைவரும் எப்போதும் கருப்பு உடைதான் அணிவார்கள் என்றும், புருவங்களில் கருப்பு வண்ணம் பூசிக்கொள்வார்கள் என்றும் அவருடன் இருந்த பெண்கள் இருவர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் Weiss மத்திய கால கட்டம் தொடர்பான பொருட்களை விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
ஜேர்மனி வில் அம்பு மரணங்கள்: பொலிஸ் விசாரணையில் அவிழ்ந்த மர்ம முடிச்சு! -
Reviewed by Author
on
May 16, 2019
Rating:

No comments:
Post a Comment