யாழ். பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் கந்தசாமி -
யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியாக யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் க.கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிதாக ஒரு துணை வேந்தர் நியமிக்கப்படும் வரை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் விக்னேஷ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் இன்றிரவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதும், யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கான நியமனம் குறித்து உயர் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழக சட்டத்துக்கமைவாக புதிய துணைவேந்தருக்கான தேர்தலை நடாத்தி, பல்கலைக்கழக பேரவையின் சிபாரிசுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதியவரொருவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் வரை – மூன்று மாத காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியரான க.கந்தசாமி, தனது பல்கலைக்கழக சேவையில் பௌதீகவியல் துறைத் தலைவராகவும், விஞ்ஞான பீடாதிபதியாகவும் பதவி வகித்ததுடன், யாழ். பல்கலைக் கழக பொறியியல் பீடம், தொழில் நுட்ப பீடம் அகியவற்றின் ஸ்தாபக பீடாதிபதியாகவும் இருந்தவராவார்.
அத்துடன் இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவராகவும் இவர் செயற்படுகின்றார்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் கந்தசாமி -
Reviewed by Author
on
May 08, 2019
Rating:

No comments:
Post a Comment