மன்னாரில் விசேட காணி மத்தியஸ்த சபை கூட்டம்-18-05-2019
நாட்டில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இடம் பெறாமல் இருந்த மன்னார் மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வு எதிர் வரும் சனிக்கிழமை (18 ஆம் திகதி) மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம் பெற உள்ளதாக மன்னார் மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஆர்.பிறின்ஸ் டயஸ் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் முதல் நீதி அமைச்சின் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணி விசேட மத்தியஸ்த சபையின் கூட்டங்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையினால் இடம் பெறாமல் காணப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வு எதிர்வரும் (18 ஆம் திகதி) மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம் பெற உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்க்கும் வகையில் பொது மக்கள் மேற்படி சபை அமர்வில் கலந்து கொண்டு தமது காணி தொடர்பான பிபிரச்சினைகளை ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஆர்.பிறின்ஸ் டயஸ் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
May 17, 2019
Rating:

No comments:
Post a Comment