மன்னாரில் தேசிய இளைஞர் விருது விழா தொடர்பான கருத்தமர்வு
தேசிய ரீதியில் இடம் பெறவுள்ள இளைஞர் விருது விழாவில் இளைஞர்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் நோக்கிலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கட்டமைப்பு தொடர்பாகவும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நாடளாவிய ரீதியிலான வேலைத் திட்டங்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அரச தனியார் அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவுபடுத்தும் விசேட கருத்தமர்வு செவ்வாய்க்கிழமை 21-05-2019 காலை மன்னார் பிரதேச செயலக மண்டபத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி. பூலோகராஜா தலைமையில் இடம் பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், விருந்தினர்களாக மன்னார் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம். மஜித் தேசிய , இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய பிரதி நிதிகளான ஜோசப் நயன் ,சோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் 2019 ஆம் ஆண்டு இளைஞர்கள் மத்தியில் காணப்படும் கலை சார்ந்த திறமைகளை பிரதேச ரீதியாக வெளிக்கொண்டு வந்து மாவட்ட , மாகாண , தேசிய ரீதியாக கொண்டு சென்று அவர்களூக்கான அடையாளத்தை பெற்று கொடுக்கும் நோக்கில் நடைபெறவுள்ள தேசிய விருது விழா நிகழ்வு தொடர்பாகவும் இவ் விருது விழாவில் இளைஞர்களின் பங்களிப்பை பிரதேச ரீதியில் எவ்வாறு அதிகரிக்களாம்? என்பது தொடர்பாகவும் அரச அதிகாரிகள் கலச்சார உத்தியோகத்தர்கள் கலைக்குழுக்கள் மற்றும் ஊடகவியலாலர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
குறித்த இளைஞர் விருது விழா போட்டி வருகின்ற மாதம் தொடக்கம் பிரதேச ரீதியாக நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
May 22, 2019
Rating:

No comments:
Post a Comment