தமிழர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் மகிழ்வுற்றனர்
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை யார் நினைத்தாலும் இனி பிரிக்க முடி யாது என யாழ்ப்பாண முஸ்லிம் சிவில் அமைப்புத் தெரிவித்துள்ளது.
மேற்போந்த கருத்தைக் கேட்கும்போது, அழுவதா அல்லது சிரிப்பதா என்று புரிய வில்லை.
இதை நாம் கூறும்போது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்து இது என்று சிலர் கருதலாம்.
ஆனால் எந்த வகையிலும் இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தன்று.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற் கொலைக் குண்டுத் தாக்குதல் நடந்த கையோடு அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என முதலில் குரல் கொடுத்ததில் வலம்புரிக்குப் பெரும் பங்கு உண்டு.
இப்போதும் நாம் கூறுவது; தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியது ஒரு குழுமம் அல்லது ஒரு கூட்டமாகவே இருக்க முடியும்.
இதைவிடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்து வதும் அவர்களுக்கு இடுக்கண் செய்வதுமான செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இந்த நாட்டில் எல்லா இன மக்களும் ஒற்று மையாக வாழவேண்டும் என நினைக்கின்ற முஸ்லிம் சகோதரர்கள் இருக்கின்றார்கள்.
வன்னி யுத்தம் நடந்தபோது, தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை கண்டு துடித்த இஸ்லாமிய சோதரர்கள் நிறைய உளர்.
அதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தனர். முஸ் லிம் சிவில் அமைப்புகள் வன்னி யுத்தத்தைக் கண்டித்தன என்று கூறுவது அடிப்படை நியாயமற்றது.
உண்மையில் வன்னி யுத்தம் நடந்தபோது, தமிழர்கள் கொல்லப்பட வேண்டும் என நினை த்த முஸ்லிம் அரசியல்வாதிகளே அதிகம்.
புலனாய்வுத் துறையில் சேர்ந்து தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுத்து, விசாரணை என்ற பெயரில் தமிழ் இளைஞர்களைக் கொடுமைப்படுத்தியவர்களில் கணிசமானவர்கள் முஸ்லிம் புலனாய்வாளர்கள்.
இந்த உண்மைகளை ஒருபோதும் மறக்க முடியாது மறக்கவும் கூடாது.
தவிர, கிழக்கு மாகாணத்தில் இன்றுவரை தமிழினத்தை அழிப்பதில் முஸ்லிம் இனத்தின் ஒரு தரப்பினர் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.
குறிப்பாக கிழக்கின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தமிழினத்துக்கு எதிராகச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல.
இதுவே உண்மை. இந்த உண்மைகள் சிலருக்குக் கசக்கலாம்.
யாருக்கெல்லாம் இந்த உண்மைகள் கசக் கின்றனவோ அவர்கள் இப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பலயீனப்பட்டவர்கள் என்பதை தமிழ் மக்களும் தமிழினம் வாழ வேண் டும் என நினைக்கின்ற அருமந்த முஸ்லிம் சகோதரர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆக, தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டபோது ஆட்சியாளர்க ளுடன் நின்று கரகோசம் செய்த முஸ்லிம் அரசியல்வாதிகளை தமிழ் மக்கள்ஒருபோதும் மறக்கவும் மாட்டர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.
இந்த உண்மையை சந்தர்ப்பவாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் சில முஸ்லிம் அமைப்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆம், தமிழ் பேசும் மக்களை இனி யாராலும் பிரிக்க முடியாது என்று கூறுவதெல்லாம் சூழ்நிலை மாற்றமேயன்றி யதார்த்தமன்று.
தமிழர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் மகிழ்வுற்றனர்
Reviewed by Author
on
May 31, 2019
Rating:

No comments:
Post a Comment