சிலாபம் பள்ளகண்டல்-அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளால் உடைப்பு
பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது.
வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான 'பள்ளகண்டல் புனித அந்தோனியார்' தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை 30-04-2019 இரவு இனம் தெரியாத விசமிகளினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் குறித்த தேவாலையம் அமைந்துள்ளது.
குறித்த தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று மாலை தெரியவந்துள்ளது.
மக்கள் நடமாட்டமில்லாத நேரம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
தொடர்ந்தும் கத்தோலிக்க மதத்தையும்,தேவாலயங்களையும் குறிவைத்து தாக்கும் முயற்சி நடந்தேறி வருகின்றமையானது கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்பை உருவாக்கி கொண்டு வருகின்றது.
மேலதிக விசாரனைகளை அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
May 03, 2019
Rating:
Reviewed by Author
on
May 03, 2019
Rating:

No comments:
Post a Comment