ஏதிலிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் - சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை -
இலங்கையில் தங்கியுள்ள ஏதிலிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என சர்வதேச அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சில இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இலங்கையில் தங்கியுள்ள ஏதிலிக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைவர்கள் நிச்சமாக தண்டிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரதிஸ்டவசமாக தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நியாயமற்ற வகையில் துன்புறுத்தப்படுவதாகவும், இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களே அதிகளவில் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதிளவு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இடங்களில் இந்த ஏதிலிக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்பட வேண்டுமென குறித்த மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக கோரியுள்ளன.
சர்வதேச மன்னிப்புச்சபை, ஆசிய மனித உரிமை போரம், மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கூட்டாக இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டு ஏதிலிக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏதிலிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் - சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை -
Reviewed by Author
on
May 10, 2019
Rating:

No comments:
Post a Comment