இலங்கையில் திருமண விழாவில் முஸ்லிம் சமையல் கலைஞர் சமைத்ததால் உணவை உண்ண மறுத்த உறவினர்கள்
இலங்கை கொழும்பில் திருமண விழாவில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சமையல் கலைஞர் உணவு சமைத்ததால் அதனை யாரும் சாப்பிடாமல் புறக்கணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இலங்கையின் கல்கமுவ பிரதேசத்தில் உள்ள குருணாகல் பகுதியில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வில் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்காக மதிய உணவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான உணவை முஸ்லிம் சமையல் கலைஞர் ஒருவரே சமைத்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு முன்னர், அனைத்து நிகழ்வுகளுக்கும் இன பாகுபாடு இன்றி குறித்த சமையல் கலைஞரே சமையல் செய்து வந்துள்ளார். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக முஸ்லிம் சமையல் கலைஞரின் உணவுகளை புறக்கணித்துள்ளனர். திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் தம்பதியரை வாழ்த்தி விட்டு உணவு உண்ணாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இலங்கையில் திருமண விழாவில் முஸ்லிம் சமையல் கலைஞர் சமைத்ததால் உணவை உண்ண மறுத்த உறவினர்கள்
Reviewed by Author
on
May 28, 2019
Rating:

No comments:
Post a Comment