நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு! -
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவைத்தலைவராக வைத்திய கலாநிதி சர்வேஸ்வரிதேவி, உப தலைவராக இரஜனிதேவி சின்னத்தம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மைய அமர்வு அமெரிக்காவில் இடம்பெற, ஜேர்மனி, பிரித்தானியா, ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இருந்து தொழில்நுட்ப பரிவர்த்தனை வழியே அமர்வு இடம்பெற்று வருகின்றது.
அவைத்தலைவருக்கு வைத்தியகலாநிதி சர்வேஸ்வரிதேவி, விக்ரர் இராஜலிங்கம் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
உப அவைத்தலைவருக்கு இரஜனிதேவி சின்னத்தம்பி, கந்தையா அஜெந்தன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
மக்களின் பிரதிநிதிகளின் இரகசிய வாக்களிப்பின் மூலம், அவைத்தலைவராக வைத்திய கலாநிதி சர்வேஸ்வரிதேவி, உப தலைவராக இரஜனிதேவி தேர்வு செய்யப்பட்டனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு! -
Reviewed by Author
on
May 20, 2019
Rating:

No comments:
Post a Comment