வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட வேண்டுகோள்-அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க விடுங்கள்!
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் ஒரு மாதப் பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக 21ஆம் திகதி வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ,
“ இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் ஆளுநர் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார் ” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட வேண்டுகோள்-அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க விடுங்கள்!
Reviewed by Author
on
May 20, 2019
Rating:

No comments:
Post a Comment