நியூசிலாந்து செல்ல முற்பட்ட 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மாயம்!
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த படகுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதநிலையில் இப்படகை கண்டுபிடிக்கும் பணிகளில் இந்திய அரசுடன் இணைந்து செயற்படுவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இது குறித்து அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“காணாமல் போன படகு எங்குள்ளது என்பதைக் கண்டறியும் நடவடிக்கைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் அவுஸ்திரேலிய அரசு இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
குறித்த படகு தொடர்பில் இன்டர்போல் அமைப்பு வழியாக இந்திய அரசு விடுத்த அனைத்து கோரிக்கைகளுக்குமான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 6 மாதங்களாக இப்படகு எங்குள்ளது என்பது தெரியாமல் உள்ளமையானது கடல்வழி ஆட்கடத்தல் நடவடிக்கையானது எந்தளவு ஆபத்தானது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இதன்காரணமாகவே அவுஸ்திரேலிய அரசு தனது எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாகப் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளது.
ஆட்கடத்தல் குற்றவாளிகளுக்கு எதிரான மற்றும் சட்டவிரோத படகுப்பயணங்களில் மக்கள் தமது உயிர்களைப் பணயம் வைப்பதைத் தடுப்பதற்கான எமது நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஜனவரி 12ம் திகதி 243 பேருடன் குறித்த படகு நியூசிலாந்து நோக்கி சென்றுள்ள நிலையில், அதில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து செல்ல முற்பட்ட 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மாயம்!
Reviewed by Author
on
June 29, 2019
Rating:

No comments:
Post a Comment