இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 148 பேர் கைது -
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி விசா அனுமதி காலம் முடிந்து சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 148 வெளிநாட்டவர்களை தாம் கைது செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் தற்போது மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பசன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
63 நைஜீரியர்கள், 4 பாகிஸ்தானியர்கள், 25 இந்தியர்கள், 9 பங்களாதேஷியர்கள், 2 சீனர்கள் மற்றும் வேறு நாடுகளை சேர்ந்த 45 பேர் இவ்வாறு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அபராதம் செலுத்திய பின்னர் இந்த வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 148 பேர் கைது -
Reviewed by Author
on
June 29, 2019
Rating:

No comments:
Post a Comment