அடுத்தடுத்த நொடிகளில் உயிரிழந்த 7 பேர்.. கதறிய குடும்பத்தார்..
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலின் கழிவுநீர் தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் 4 பேர் உட்பட 7 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் மூன்று பேர்களின் பெயர்கள் அஜய் வசவா (24), விஜய் சவுகான் (22), சாஹ்தேவ் வசவா (22) என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொலிசார் ஹொட்டல் உரிமையாளர் அப்பாஸ் போரனியாவை கைது செய்துள்ளனர்.
பொலிசார் கூறுகையில், கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் ஒருவர் இறங்கியுள்ளார். உள்ளே வாயு கசிவு காரணமாக அவருக்கு மூச்சு திணறியது.
அவர் வெளியில் வராததை கண்டு மற்றவர்கள் உள்ளே இறங்கிய நிலையில் அனைவரும் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர். இதனிடையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பார்த்து குடும்பத்தார் கதறியது.பரிதாபத்தை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்த நொடிகளில் உயிரிழந்த 7 பேர்.. கதறிய குடும்பத்தார்..
Reviewed by Author
on
June 16, 2019
Rating:

No comments:
Post a Comment