பிரான்சின் 9 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! -
நேற்றைய தினம் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரான்சின் 9 தென்கிழக்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் எல்லாம் புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு, அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த இடி முழக்கம் மற்றும் மின்னல் தாக்குதல்களுடன் புயல் மற்றும் மழைப்பொழிவு இங்கெல்லாம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையமான Meteo-France தெரிவித்துள்ளது.
செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நகரங்கள்
- Ain
- Ardeche
- Drome
- Isere
- Haute-Loire
- Rhone
- Savoie
- Haute-Savoie
- Loire
பிரான்சின் 9 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! -
Reviewed by Author
on
June 16, 2019
Rating:

No comments:
Post a Comment