வடகொரியாவை போல் சீனா அதிரடி.. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது -
யூன் 2ம் திகதி காலை ஷாண்டோங் தீபகற்பத்திற்கு அருகே போஹாய் விரிகுடாவில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. JL-3 என்றழைக்கப்படும் ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வல்லமை பெற்றது. முன்னதாக, இராணுவம்-கடற்படை பயிற்சி காரணமாக போஹாய் விரிகுடா பகுதி தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யூன் 2ம் திகதி சீனா சமூக ஊடங்களில் பலர் தான், அடையாளம் தெரியாத பறக்கும் தட்டை பார்த்ததாக புகைப்படத்துடன் பதிவிட்டனர். இதனையடுத்து, சீனா கடற்படையின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில், நீங்கள் பறக்கும் தட்டை நம்புகிறீர்களா? என்ற பதிவுடன் ஏவுகணை சோதனை புகைப்படத்தை இணைத்து வெளியிட்டது.
இதன் மூலம் சீனா ஏவுகணை சோதனை மேற்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏவுகணை சோதனையை மீனவர்கள் பலர் நேரடியாக கண்டுள்ளனர். இந்த ஏவுகணை சுமார் 12,000 முதல் 14,000 கி.மீ வரை கண்டம் விட்டு கண்டம் தாக்கும் என வல்லமை பெற்றது என கூறப்படுகிறது.
நாட்டின் அணுசக்தி தடுப்பு திறன்களை கடல் முதல் நிலம் வரை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அமெரிக்காவும் அதன் நாட்பு நாடுகளும், சீனாவின் ஏவுகணை சோதனை குறித்து கூர்ந்து கவனித்து வந்த நிலையில், சீனா சத்தமில்லாமல் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவை போல் சீனா அதிரடி.. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது -
Reviewed by Author
on
June 04, 2019
Rating:

No comments:
Post a Comment