கிழக்கினை உண்மையாக நேசிப்பவர்கள் வடக்கில் இருக்க வேண்டும்! வியாழேந்திரன் -
கிழக்கினை உண்மையாக நேசிப்பவர்கள் வடக்கில் இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்காலிகமாக நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ள உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முற்போக்கு தமிழர் அமைப்பினால் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் வரையில் தமது போராட்டம் தொடரும் என முற்போக்கு தமிழர் அமைப்பு அறிவித்துள்ள நிலையில் தொடர்ந்தும் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இன்று காலை முற்போக்கு தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனும் கலந்து கொண்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒரு குடையின் கீழ் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கினை உண்மையாக நேசிப்பவர்கள் வடக்கில் இருக்க வேண்டும்! வியாழேந்திரன் -
Reviewed by Author
on
June 24, 2019
Rating:

No comments:
Post a Comment